February 8, 2014 05:24 pm
சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
சுமார் 2,300 பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பாலியல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கலைவாணி தமது கோரிக்கையை வலியுறுத்தி பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த கோரிக்கைக்கான நியாயங்களை விளக்கினார்.
இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஏற்கனவே மனுக்களை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
பாலியல் தொழிலாளர்கள் தொழில் நடத்தவென தனியாக சிகப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஏற்படுத்தாமல் இருக்கும் ஒரே இந்தியப் பெருநகரம் சென்னைதான். மும்பைக்கு காமத்திப்புரா, கொல்கத்தாவுக்கு சோனாகாச்சி என பாலியல் தொழிலுழுக்கு என்ற குறிப்பிட்ட சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன.
அவ்வாறான இடம் சென்னையில் இல்லாததால், தாங்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாவதாக பாலியல் தொழிலாளிகள் கூறுகின்றனர்.
காவல்துறையினரும், ரவுடிகளும் தங்களிடம் இருந்து பணம் பிடுங்குகிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
தங்களுடைய பிரச்சினை என்பது அடிப்படையில் ஒரு மனித உரிமைப் பிரச்சினை என வாதிட்ட அவர், இதில் அரசும், சமூகமும் வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் கூறினார்.
எனவே மும்பை கொல்கத்தா போல சென்னையிலும் தாங்கள் தொழில் செய்வதற்கான தனியான சிவப்பு விளக்கு பகுதியை அரசு அடையாளம் காட்டவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
news thamilan thanks
No comments:
Post a Comment