துபையில் EPMA கலந்தாய்வு கூட்டம்..!
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்துவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இவ்வருடம் முதல் நமதூரில் இருந்து வெளியூர்களில் சென்று படித்து சாதனை படைக்கும் மாணவ,மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது பற்றியும் EPMA கவலை தெரிவித்துள்ளது. இந்நிலைமை நீடித்தால் வரும் கால கட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நமது பள்ளிகளிலும் ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்த பிரத்யேக ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று EPMA கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், நமதூரை சேர்ந்த சகோதரர் ஜாபிர் ஹூசைன் அவர்களது மகன் சகோதரர் ஃபர்தான் அவர்கள் இந்த கல்வியாண்டில் CBSE - syllabus (Central Board of Secondary Education) 12-ம் வகுப்பில் துபையில் தான் பயின்ற பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்து சிறப்பித்துள்ளார். அவரை கடந்த வெள்ளிக்கிழமை (06-06-2014) மாலை 5.00 மணி அளவில் துபை, அல் கிசைசில் உள்ள அவர்களது இல்லத்தில் EPMA நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் EPMA நிர்வாகிகள் மற்றும் அமீரக வாழ் நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
puduvalasainews thanks
No comments:
Post a Comment