டாக்கா, அக் 1–
வங்காள தேசத்தில் தொலை தொடர்பு துறை மந்திரியாக இருந்தவர் அப்துல் லத்தீப் சித்திக். இவர் ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை விமர்சனம் செய்து இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
‘‘நான் ஹஜ் மற்றும் தலிபிக் ஜமாத்துக்கும் முற்றிலும் எதிரானவன். 20 லட்சம் பேர் சவுதி அரேபியாவுக்கு ‘ஹஜ்’ யாத்திரை செல்கின்றனர்.
ஹஜ் பயணம் மனித சக்தியை வீணடிக்கிறது. அதனால் அதிக பணம் செலவழிகிறது. பொருளாதாரமும் பாதிக்கிறது என கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு வங்காள தேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
போராட்டமும் நடத்தப்பட்டது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்தார்.
maalaimalar thanks

No comments:
Post a Comment