- THURSDAY, 16 OCTOBER 2014 19:15
நேற்று முன்தினம் விசாரணைக்கு என்று ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சையது முகமது, காவல்துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சையது முகம்மது தம்மைத் தாக்கினார் என்றும், எனவே அவரை சுட நேர்ந்தது என்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் கூறியுள்ளார். ஆனால் சையது முகம்மது சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இது நேற்று முன்தினம் பெரிய விவகாரத்தைக் கிளப்பாத நிலையில் பாதிக்கப்பட சமூகத்தினர் கொலையுண்ட சையது முகம்மதுக்கு ஆதரவாகத் திரண்டு, காவல்துறை உதவி ஆணையருக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டம் நடத்திய நிலையில் தான் அனைவருக்கும் விழிப்புணர்வு வந்தது.
காவல்துறையில் அடையாளம் எதுவும் அழிந்துவிடாமல் இருக்க காவல் துறைக்கு சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், காவல்துறை உதவி ஆணையரின் பணி பறிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சையத் அகமதுவின் உடலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளதாகவும், அவரின் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சையத் முகமது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
news 4tamilmedia thanks
No comments:
Post a Comment