4 ஆயிரம் பேரின் உயிரை குடித்த எபோலா (வீடியோ இணைப்பு)
4 ஆயிரம் பேரின் உயிரை குடித்த எபோலா (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2014,
எபோலா நோய்க்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்ரிக்காவின் மேற்குபகுதிகளில் பரவி வரும் எய்ட்ஸை விட கொடிய நோயான எபோலாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்காக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி உலக சுகாதார நிறுவனம் எபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் 7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4,033 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை உலக சுகதார நிறுவன வெளியிட்ட அறிக்கையின் போது, 8033 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ளதாகவும் 3,865 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment