குவியும் பிணங்கள்…இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: நேபாள் அரசு (வீடியோ இணைப்பு)
குவியும் பிணங்கள்…இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: நேபாள் அரசு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 02 மே 2015, 06:41.54 மு.ப GMT ]
நேபாள் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6600 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
மீட்பு பணிகள்
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரமாகியும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது தொடர்ந்து குவியல் குவியலாய் பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 6600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 14,023 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிருடன் மீட்க வாய்ப்பில்லை
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டடு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், கட்டிடஇடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இனி இனி இல்லை என நேபாள் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லட்சுமி பிரசாத் தகவல் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment