சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்ட்ட பயணிகள் அனைவரும் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டிய விடயம்.
விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் பயண பொதியை சோதனையிட்ட போது விலங்குகளின் தோல்கள், விலங்குகளின் எலும்புகள், இறந்த விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட சில உடற்பாகங்கள், மனிதனின் உரோமம், இரத்த குப்பி, சில வகை மரத்தினுடைய இலைகள், தூப பொருட்கள், மற்றும் தாயத்துக்கள் என்பன அவர்களின் பொதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருகின்றது. விரைந்து செயற்பட்ட சுங்க அதிகாரிகள் குறிப்பிட்ட பொருட்களை பறிமுதல் செய்துவிட்டு உடனடியாக தண்டப்பணம் அறவீடு செய்த பிறகு அவர்களை ஐக்கிய அரபு எமிரேட்சிற்குள் நுழைய விடாமல் அப்படியே விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் குறிப்பிட்ட அத்தனை பயணிகளின் பெயரும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவர்களின் வாழ்நாளில் இன்னுமொரு தடவை அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிற்குள் நுழைய முடியாது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு கண்காணிப்பாளரான ஹசன் இப்ராஹீம் அவர்கள் இது பற்றி மேலும் கூறும்போது, ஐக்கிய அரபு எமிரேட்சிற்குள் பல்வேறு நாட்டை சேர்ந்த பல மதங்களையுடைய மக்கள் உள் நுழைகிறார்கள் அவர்களின் மத நம்பிக்கைப்படி சூனியம் என்பது சாதாராண விடயம், ஆனால் எங்களின் மத நம்பிக்கைக்கு அது முற்றிலும் எதிரான விடயம் என்பதால் இவ்வாறான சூனியகாரர்களை நாங்கள் தடை செய்திருக்கிறோம் இப்படி சூனியத்தை நம்புகின்றவர்கள் ஒரு சமுதாயத்தின் மிகப்பெரிய ஆபத்து ஆதலினால் எமது நாட்டை இவ்வாறனவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.அது மட்டுமல்ல இது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது இதை தடுப்பதற்கு எமது அதிகாரிகள் 24 மணி நேரமும் மிகவும் விழிப்புடன் செயற்படுவார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சாதரணமாக தகட்டில், அல்லது கடதாசிகளில் எழுதப்பட்ட குர் ஆன் வசனங்கள் குங்குமப்பூ அல்லது மை தடவப்பட்ட ஆவணங்களை தமது கைப்பையில் வைத்து எடுத்து வருகின்றார்கள் இவ்வாறான பொருட்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் அடங்குகின்றன எதிர்வரும் காலங்களில் இருந்து பயணிகள் இந்த பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்சிற்குள் கொண்டு வருவதில் நின்றும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
இப்போதெல்லாம் ஐக்கிய அரபு எமிரேட்சின் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு மிகவும் கடுமையான பாதுகாப்புகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது சில மாதங்களுக்கு முன்பு முன்னூறுக்கும் அதிகமான வகை மாத்திரைகளை வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சிற்குள் கொண்டு வருவது மிக கடுமையாக தடை செய்யப்பட்டிருந்தது அவ்வாறு மாத்திரைகளை கொண்டு வந்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கி கொண்டால் தண்டனை மிக அதிகமாக இருக்கும் அந்த பட்டியலில் மேற்கூறப்பட்ட பொருட்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சேர்த்திருக்கின்றது.
ஆகவே புதிதாக ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு தொழிலுக்கு வருகின்ற நண்பர்கள் உங்களிடம் யாராவது பொருட்களை தருகின்ற சமயம் அதனுள்ளே மாத்திரைகள் அல்லது இந்த செய்தியில் மேற்கூறப்பட்ட பொருட்களில் ஏதாவது ஒன்று இருக்கின்றதா என்பதை முறையாக பரீட்சித்து பாருங்கள் உறுதிப்படுத்திய பிறகு அந்த பொருட்களை பொறுப்பெடுங்கள் மாறாக கவனயீனமாக நீங்கள் செயற்படும் இடத்து அதிகமான ஆபத்துக்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.. எனவே விபரீதமான முயற்சிகளை பண்ணி பார்க்க முன் நிற்கவேண்டாம்..
இது உங்களுக்கான அன்பான அறிவுரை..
No comments:
Post a Comment