ரமணன் மாதிரி வானிலை சொல்லும் முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கேள்வி: பீகாரில் பாஜகவை வீழ்த்த‘மெகா கூட்டணி’ உருவாக்கப்பட்டது, அதேபோல் தமிழகத்தில் ’மெகா கூட்டணி’ அமையுமா?
கேள்வி: பீகார் தேர்தல் நமக்கு என்ன பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது? நாம் இதிலிருந்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பீகார் மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் திரு.நிதீஷ்குமார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லவும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும், தலைவர் கலைஞர் சார்பாகவும் வாழ்த்துகளை சொல்லவும் நான் நேரில் செல்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எனக்கும் அவர் நேரடியாக அழைப்பு அனுப்பியிருக்கிறார். அந்த அழைப்பை ஏற்று கொண்டு தலைவர் கலைஞர் சார்பில் நான் அங்கு செல்கிறேன். நாளைய தினம் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளேன். பீகாரில் திரு.நிதீஷ் குமார், திரு.லாலு பிரசாத் அவர்களின் கூட்டணியோடு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றி பீகார் மாநிலத்திற்கு மட்டுமல்ல, வட மாநில பகுதிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இந்த கூட்டணியின் வெற்றியை எல்லோரும் பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியில் அரசு அமைய வேண்டும் என்பதை தான் இந்த பீகார் மாநில தேர்தல் வெற்றி காட்டுகிறது.
கேள்வி: தமிழக அரசு புயல் பாதிப்புகளை தவிர்க்க முடியாத இழப்பு என்று கூறியுள்ளது. மேலும் ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது?
பதில்: தவிர்க்க முடியாத பாதிப்புகள் என்று சொல்வதை எந்த காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், எப்படி முதலமைச்சர் வாரத்திற்கு ஒருமுறை, அரை மணி நேரம் மட்டுமே கோட்டைக்கு வந்து தன்னுடைய பணிகளை செய்கிறாரோ, அதே போல் வெள்ள நிவாரண பணிகளுக்கும் அரை மணி நேரம், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து போவது போல், வந்து சென்றுள்ளார். அப்படி வரும் போது, அவரே சொல்லியிருக்கிறார் “வாக்காளப் பெருமக்களே”, “அண்ணா நாமம் வாழ்க”, “எம்ஜிஆர் நாமம் வாழ்க” ஆகியவற்றை சொல்லிவிட்டு, மைக்கிலேயே கூறினார், “மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் பெய்துவிட்டது” என்று. ஆக, எல்லோரையும் போல் இந்த காலகட்டத்தில் மழை வரும் என்று அவருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. இப்படி, ரமணன் மாதிரி வானிலை ஆராய்ச்சியை அறிந்து சொல்லக் கூடிய முதலமைச்சர், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுதான் என் கேள்வி.
கேள்வி: அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து அரசு மக்களுக்கு உரிய உதவிகளை செய்து வருவதாக விளக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அரசு செயல்படுவதில்லை என்று கூறுவது சரியான குற்றச்சாட்டாக உள்ளதா?
பதில்: அமைச்சர்கள், அதிகாரிகள் தினமும் பார்க்கிறார்கள். எப்படி பார்க்கிறார்கள் என்றால், ஒரு கூட்டத்தை கூட்டுகிறார்கள், அதன் நடுவே ஜெயலலிதாவின் படத்தை வைத்து விடுகிறார்கள். பின்னர், பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்கிறார்களே ஒழிய, நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
news nakkheeran thanks
No comments:
Post a Comment