அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 5 October 2016

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்


நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை பெண்களுக்காக

புற்றுநோயை வருமுன் காக்க பெண்களுக்கான சில குறிப்புகள்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை.

புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்

சமையல் மற்றும் உணவில் பெண்கள் கவனம் கொள்ளவேண்டியது
எந்த நோயிக்குமே உணவே மருந்தாகும். அளவுக்கு அதிகமான உணவும் நல்லதில்லை. அது நஞ்சே ஆகும்.அந்தகாலம் போல் எந்த உணவும் இப்போது சத்தானது கிடையாது. பாஸ்புட் மோகம் அதிகமாக இருக்கு. சில உணவு பொருட்களில் கெமிக்கல் அதிகமாக கலந்து தான் விற்பனையாகிறது.

பெரும்பாலும் 80 % பெண்கள் தான் சமைக்கிறார்கள், இப்ப காலம் மாறி போய் ஆண்களும் சமையல் உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

பெரும்பாலும் உணவு பொருட்களில் யாரும் காலவாதி தேதியை பார்ப்பதில்லை.
ஒரு பிரட் வாங்கினால் கூட காலவாதி தேதியை பார்க்காமல் காலவாதி தேதி முடிந்த பிறகும் அப்படியே சாப்பிடுகின்றனர். .சாப்பிடும் போது நுனுக்கமாக பிரட்டை பார்த்தால் அதனுள் பூஞ்சை இருப்பதை நாம் அறியலாம்.

அதே போல் மீன் வறுவல், மட்டன் வறுவல், சிக்கன் வறுவல்,கட்லெட், அப்பளம், வத்தல், சுட்ட கிரில் அயிட்டங்கள் இதேல்லாம் சமைக்கும் போது கண்டிப்பாக சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும், கவனக்குறைவாக இருந்தாலும் உடனே கரிந்து போய்விடும்.
எண்ணையை அதிக சூட்டில் அப்பளத்தை போடும் போது கூட உடனே கரிந்து விடும் அதை தூக்கி எறிய மனமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மற்றும் சிக்கன், மீன், மட்டன் வறுவல்கள் செய்யும் போது கருகாமல் செய்வது நல்லது.அதிக தீயை வைத்து பொரிக்காதீர்கள்.

அதே போல் ரசம் தாளிக்கும் போது எண்ணையை சூடாக்கியதும் , அதிக சூடாக இருந்தால் கடுகை போட்டதுமே ஒரு நிமிடத்துக்குள் கரிந்து விடும், ஆனால் அதையும் வேஸ்ட் பண்ண மனமில்லாமல் அப்படியே தாளித்து கொட்டுகின்றனர்.(இது சமையலில் சிலர் செய்து வரும் மிகப்பெரிய தவறு)
இதெல்லாம் சாப்பிடுவதால் சாப்பிடும் போது நல்ல தான் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு நெஞ்சு கரிக்கும். கருகிய உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்.அடுத்து வாயு தொல்லை ஆரம்பிக்கும்.

கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம். அதிக வெப்பத்தில் (க்ரில், பார்பெக்யூ, எண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பது, அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணமாம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்., சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள்.

ஜாம் ,, தயிர், ஊறுகாய் பாட்டில்களில் எல்லாம் சரியாக காய்ந்த கரண்டி பயன் படுத்த வேண்டும்.அப்படி பயன் படுத்தாமல் விட்டால் மேலே பூஞ்சை படிந்த்து விடும். அதை சரியாக கவனிக்காமல் மேலோடு வழித்து போட்டு விட்டு பயன்படுத்துவோரும் இருக்கினறனர். அப்படி பயன்படுத்தாதீர்கள்.பெண்கள் குடும்பத்தில் உடல் நலம் கருதி சமையலில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் கொத்துமல்லி கீரை, காலிப்ளவர், புரோக்கோலி,கீரை வகைகள் அதில் நிறைய மணல் மற்றும் பூச்சி புழுக்கள் இருக்கும், முறையாக வென்னீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கழுவி பயன் படுத்தவும்.

ஆரோக்கியமான சமையலே நோய்க்கு நல்ல மருந்தாகும்.

கர்பவாய், மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும் உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால் அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது அதையும் மருத்துவரிடம் சரியாக பரிசோதித்து கொள்ளுங்கள், ஒரு முறை எழுதி கொடுத்தால் மறுபடி போய் செக் பண்ணி கொள்ளவோ அதை பற்றி மருத்துவரிடம் விவாதிக்கவோ வெட்கப்பட்டு கொண்டு அதையே 10 வருடத்துக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்

ஒரு வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று சாப்பிடும் மாத்திரைகளை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

காப்பர்டி கருத்தடை சாதனம் பயன் படுத்தினால் கூட கேரண்டி 3 முன்று வருடம் அல்லது 5 வருடம் என்று டாக்டர் சொன்னதும் அதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதையும் சரியாக ஆறுமாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை செக்அப் செய்து கொள்ளுங்கள். முன்று வருடம் ஒரு முறை கண்டிப்பாக காப்பர்டியை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் (அ) அதிக உதிர போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. கர்ப்ப பை புண்ணாகிடும், தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


பல் வலி வந்தால் இரண்டு நாட்கள் அதிக வலி இருக்கும் பிறகு வலி நின்று விடும், திரும்பவும் வந்து வந்து சரியாகும், அதான் சரியாகி விட்டதே என்று விட்டு விடாமல் உடனே உரிய மருத்துவரை அனுகுங்கள். அதே போல் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.

தலை வலியோ, வயிற்று புண், வயிற்று வலி , நெஞ்ரிச்சல், வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும் என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம் டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம், அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யுமாம். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.
.

.

வாழ்வேமாயம் படத்தில் தான் கேன்சர் பற்றியே தெரியும். அதற்கு பிறகு ஆங்காங்கே சினிமா நடிகைகளுக்கு கேன்சர் என்பது ,தெரிய வந்தது.
ஆனால் இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான்.
கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.

ஆகையால் சிந்தியுங்கள் பெண்களே உயிர்வாழ உணவு மிகவும் முக்கியம் அதை சரியான முறையில் சமைப்பது உங்கள் கடமை சிறிது கவனக்குறையால் என்றுமே தீராத பெரிய வியாதி, அதிக செலவு,மன உலைச்சல், மற்றவர்களுக்கு தொந்தரவு, சந்தோஷமின்மை இதெல்லாம் தேவையா???
இதேல்லாம் மேற்கண்ட விளைவுகளால் புற்று நோய் ஏற்பட்டவர்களை நேரில் கண்ட்தை வைத்து தொகுத்து அளித்துள்ளேன்.


இந்த புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை முடிந்த வரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்

news kiliyanur thanks

No comments:

Post a Comment