வத்திராயிருப்பு: பஸ்களில் மாணவர்கள் தொங்கிப் பயணம் செய்வதால்
, வத்திராயிருப்பு பகுதி கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாப்பட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பள்ளிகளில் படித்து வருகின்றனர். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும், வத்திராயிருப்பில் இருந்து கிராமப் புறங்களுக்கு பஸ் சேவை குறைவாக இருப்பதால், பள்ளி மாணவ, மாணவியர் ஆபத்தையும் உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்கின்றனர்.எனவே, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமப் புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ்களில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அச்சமயங்களில் போலீசார் இருந்தும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, வத்திராயிருப்பை மையமாகக் கொண்டு கிராமப் புறங்களுக்கு அதிக பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
news dinakaran thanks
http://agriavenue.com/
ReplyDelete