அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 6 April 2022

துவா

அருமையான *துஆ.* ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு 

*ஆமீன் சொல்லுங்கள்*

{""யா அல்லாஹ்""}

  நாங்கள் என்ன

*புண்னியம் செய்தாேம்*

நீ எங்களை முஸ்லீமான

""ஆண் பெண்னுக்கு""

    "பிறக்கச் செய்தாய்"!

      {""யா அல்லாஹ்""}

நாங்கள் என்ன நன்மை

     ""செய்தாேம்""

""நீ எங்களை ஊனமில்லாமல்""

"பிறக்கச்செய்தாய்"

  "{யா அல்லாஹ்"}

நாங்கள் பாவிகளாக

     இருந்தும் "  நீ  "

        *எங்களுக்கு* 

   "உணவளிக்கிறாய்"

     "{யா அல்லாஹ்"}

   "நாங்கள் தவறுகள்"

    *செய்பவர்களாக*

      "இருந்தாலும்"

*நீ எங்கள் மீது இரக்கம்*

     "காட்டுகிறாய்"

  "இதற்கெல்லாம் மிக

""மேலாக எங்களை""

              "நீ "

    ""நபி முஹம்மத் {ஸல்}

      "அவர்களுடைய

      "உம்மத்தினராக""

   "வாழச்செய்தாய்"

   "அதை விட மேலாக"

          ""எங்களுக்கு"" மறுமையில்""    நீ

  ""சுவர்க்கத்தை""

       தயார் செய்து

   "வைத்திறிக்கிறாய்"

  "அதை விட மேலாக"

  "அதை விட மேலாக"

""   சுவர்க்கத்தில்  ""

உன்னை எங்களுடைய

கண்களினால் கானக்

"கூடிய பாக்கியத்தை"

   "வைத்திறிக்கிறாய்"

"""அல்லாஹ்""

இதற்கெல்லாம் எங்கள்

"வாழ் நாள் முழுவதும்"

*"நாங்கள் மன்டியிட்டு"*

    ""சஜ்தாவிளேயே"

கிடந்தாலும் உனக்கு

  "நன்றி செலுத்த"

முடியாது {"அல்லாஹ்"}

 எங்களை ""உன்""

  கருனையினால்

பொறுந்திக் 

         கொள்வாயாக!!

   

""""யா அல்லாஹ்"""

*உன்னை அறியாமல்*

   வாழும் எங்களது

சகாேதர சகாேதிரிகளுக்கு!!!

*நீ நேர் வழி காட்டுவாயாக!!*

   

    """ரஹ்மானே""

  ஆமீன்   ஆமீன்  !!

யா  அல்லாஹ் ...!

*நபி  மூஸாவை  காக்க கடலை பிளந்தவனே..!*

தொட்டிலில்  குழந்தையாக  இருந்த  ஈஸா  நபியை  பேச  வைத்தவனே....!

மீனின்  வயிற்றில்  இருந்த  யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பாற்றியவனே...!

கடும் சோதனைக்கு  உட்படுத்தப்பட்ட  அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே...!

*என் இரட்சகன..!*

மகத்தான  உன்னுடைய பெயரால் கேட்கிறன்..!

*துக்கம் , கவலை , நெருக்கடி , வியாதி , இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக*...!

நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக..!

*எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே..!*

நிச்சயமாக  நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்...!

என்னை படைத்தவனே.!

என் வாழ்க்கையை  உனது கரத்தில் வைத்திருப்பவனே..!

என்னுடைய நற்பாக்கியமும் , துர்பாக்கியமும் உன் கையில் இருக்கின்றன..!

ஏக இறைவா..!

என்னுடைய  உள்ளத்தை மகிழ்ச்சி  உடையதாக ஆக்குவாயாக.! 

இவ்வுலகமே  எனக்கு  ஒன்று சேர்த்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று  நீ  எழுதி வைத்ததை  தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்...!

உலகமெல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்....!

ஏக இறைவா..!

என்  உள்ளத்தில்  நிறைய  தேவைகள்  இருக்கின்றன.!

உன்னையல்லாமல்  வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது.. என்னுடைய  ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீமட்டுமே அறிவாய்..! 

என்னைப் பற்றி  யார் தவறாக நினைத்தாலும் , என்னை ஒதுக்கி வைத்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னைப் பற்றி என் ரப்பூ நீ  அறிவாய் அது போதும்....! 

" குன் " ஆகுக  என்று சொன்னால்  அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே ....! 

என்னுடைய விருப்பங்களை  நோக்கி  ( குன் ) "ஆகிவிடு" என்று  சொல்வாயாக...! 

நீ  என்னுடன்  இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை..!

*எனக்கு நீ  வழி  காட்டு*  ,

என்னுடைய காரியங்களை  நீ  திட்டமிட்டு  நிறைவேற்று..!

நான்  தவறான  வழியில்  செல்லும் போது  என்னை நேரான வழியில்  திருப்பி விடு...! 

வாழ்கின்ற  காலமெல்லாம் உனக்கு  கட்டுப்பட்டவனாக  வாழ்ந்து  மரணிக்கின்ற  பொழுதும்  உனக்கு  கட்டுப்பட்டவனாக  மரணிக்கின்ற  பாக்கியத்தை  தந்தருள்வாயாக...! 

யா  அல்லாஹ்..!

எங்கள்  பாவங்களை  மன்னித்து விடு..! 

யா அல்லாஹ்..!

நாங்கள்  செய்த  தவறுகளை  மன்னித்து விடு..!

*யா அல்லாஹ்..!*

கப்ருடைய வேதனையிலிருந்து  நரக  நெருப்பிலிருந்தும் எங்களை  பாதுகாப்பாயாக..!

யா  அல்லாஹ்..!

இம்மையிலும்

மறுமையிலும் 

வெற்றியை

தருவாயாக..!

இறைவா..!

சிறிய  பெரிய  எல்லா  நோய்களை விட்டு எங்களை  வாழச்செய்வாயாக..!

இறைவா..!

*இறையச்சத்தையும்  பேணுதலையும்  எங்களுக்கு  தந்தருள்வாயாக..!*

இறைவா...!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்  விரும்பிய  வழி  முறையில்  எங்களை  வாழச்செய்வாயாக..! 

இறைவா..!

*பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின்  சுன்னத்தான  வழிமுறையில்  எங்களை  வாழ  வைப்பாயாக...!*

இறைவா..!

மறுமை  நாளில்  பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல

்லம் அவர்களின்  பரிந்துரையை எங்களுக்கு  அருள்வாயாத...!

இறைவா..!

உன்னுடைய  பிரியத்தையும்  எங்களுடைய  உள்ளங்களில்  நிலைத்திருக்கச் செய்வாயாக..!

*இறைவா..!*

மரண  வேதனை , மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக..!

இறைவா..!

முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு  லேசாக்கி  வைப்பாயாக...!

இறைவா..!

கியாமத்  நாளில்  உன்னை  தரிசிக்க  கூடிய  பாக்கியத்தை  எங்களுக்கு  தந்தருள்வாயாக...!

*இறைவா...!*

ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாயாக..!

*இறைவா..!*

கியாமத்  நாளில்  வெப்பத்தை  விட்டும்  , நரக  நெருப்பை விட்டும்  எங்களை  காப்பாற்றுவாயாக...!

இறைவா..!

கியாமத்  நாளில்  இழிவுகளை  விட்டும்  எங்களை  மூஃமீனான  ஆண் , பெண்  அனைவரையும் காப்பாற்றுவாயாக...!

*இறைவா..!*

எங்களின்  அமல்களின்  பட்டோலையை  எங்களுடைய  வலது  கையில்  கொடுப்பாயாக...!

இறைவா...!

கியாமத்  நாளில்  உன்னுடைய  அர்ஷின்  நிழலில்  எங்களுக்கு  இடமளிப்பாயாக....!

இறைவா...!

ஸிராத்துல்  முஸ்தகீம்  பாலத்தை  மின்னல்  வேகத்தில்  கடக்கச் செய்வாயாக....!

இறைவா..!

உன்னுடைய  அருளை  கொண்டு  எங்களுடைய  அனைத்து  பாவத்தையும்  மன்னித்து  எங்களை  சொர்க்கத்தில்  நுழைய  செய்வாயாக....!

ஆமீன்  ஆமீன்  யா ரப்பல்  ஆலமீன்.....!

*யா அல்லாஹ்*

எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!!

*யா அல்லாஹ்*

எங்களது கணவன்,

மனைவி ,குழந்தைகள்,

சகோதர,சகோதரிகள்,

உற்றார் உறவினர்கள் ,

*உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!*!!

*யா அல்லாஹ்*

நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ,

அறிந்தோ அறியாமலோ,

வேண்டுமென்றோ,

திட்டமிட்டோ,

மறைமுகமாகவோ,

வெளிப்படையாகவோ,

ரகசியமாகவோ,

பகிரங்கமாகவோ,

*சிறிதோ பெரிதோ,*

எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து 

மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக

*மறுமை நாளில்* எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக........!!!

*யா அல்லாஹ்*

உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக

கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து 

எங்களை தனிமைப்படுத்தி விடாதே........!!!

*யா அல்லாஹ்*

*நாங்கள் கேட்பதற்கு முன்பாக* 

எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக......!!!

*யா அல்லாஹ்*

யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக......!!!

*யா அல்லாஹ்*

எங்களது சொல்லாலோ

செயலாலோ 

பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்

அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக.......!!!

*யா அல்லாஹ்*

*எங்களது உறவுகளை கொண்டோ*

*செல்வத்தை கொண்டோ*

எங்களை சோதித்து விடாதே........!!!

*யா அல்லாஹ்*

உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக

உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக.......!!!

*யா அல்லாஹ்*

எங்களுக்கும்,

எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக

நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து 

எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக.....!!!

*யா அல்லாஹ்*

எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும்,

வேதனையிலிருந்தும்,

விபத்துகளிலிருந்தும்,

விஷஜந்துக்களிலிருந்தும்,

அபாயங்களிலிருந்தும்,

இயற்கை சீரழிவிளிருந்தும்,

ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,

வறுமையிலிருந்தும்,

கடனிலிருந்தும்,

பலாய் முஸீபத்துகளிலிருந்தும்,

எதிர்பாராத மரணத்திலிருந்தும்,

கண் திருஷ்டியிலிருந்தும்,

எங்களை பாதுகாப்பாயாக...!!!

*யா அல்லாஹ்*

எங்களது 

*உணவும்,உடையும்,இருப்பிடமும் ஹலாலானவையாக தருவாயாக*

எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக,

உனக்கு பிரியமானவர்களாக

மாற்றுவாயாக

மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும்,

*மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தருவாயாக.........!!!*

*யா அல்லாஹ்*

உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக...!!!

*யா அல்லாஹ்*

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தையும் 

எங்களுக்கு மறுமையில் வழங்குவாயாக.......!!!

*யா அல்லாஹ்*

எங்களை கப்ரின் அதாபிலிருந்தும்,

நரக நெருப்பில் இருந்தும் 

பாதுகாத்து 

மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும் 

மேன்மையான சுவர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக......!!!

எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!! *ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்*
💞💞💞💞💞💞



Don't miss ifthar dua
🕋🕌🕌🕌🕋
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான்   முஹம்மத் (ஸல்) இன்  கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..

ஸூப்ஹானல்லாஹ்!!

இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..

தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட 
நோன்பு திறக்கும் நேரத்தை வீணாக கழிக்காமல் இறைவனி்ன் பொருத்தம் அடைவீர்..
🤲🤲🤲🤲

No comments:

Post a Comment