பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday, 5 April 2023
செருப்பு தைப்பவரிடம் உன் செருக்கை காட்டாதே உன்னை சுமக்கும் செருப்புக்கும் அதை தைப்பவர்க்கும் செருக்கு என்றும் இருந்ததில்லைதன் கைகளைக் கொண்டு தைப்பதால் அவர் தாழ்ந்தவரும் அல்ல நீ கால்களில் அணிவதால் நீ உயர்ந்தவனும் அல்ல...கைகளால் தீண்டுவதால் அவர் கையாளாகாதவர் அல்ல...கைகளால் தீண்டாமல் உன் கால்களும் ஊன்றுவதில்லை...அவர் தைத்துக் கொடுப்பதால் தான் நீ வைத்துக் கொண்டு நடக்கிறாய்... அவரின் உழைப்பு உன்னை உயர்த்துகிறது...செருப்பு தைப்பவரும் சரி செருப்பும் சரி பிரிவினையை வலியுறுத்துவதில்லை... ஒன்றை ஒன்று பிரிந்தாலும் ஒன்றுக்கும் உதவுவதில்லை...எவனோ ஒருவன் சர்வாதிகாரத்தின் கீழ் அடிமையாய் சவமாகி போகும் நம்மை போல...உங்கள் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் செருப்பாக இருக்க விரும்புகிறேன் நான்கால் போன போக்கில் கடந்து கொண்டிருக்கும் உங்களை வழிநடத்த..எந்த சாதியும் தாழ்ந்தது அல்ல எந்த தொழிலும் குறைந்ததும் அல்லதாழ்த்தப்பட்டவன் என்று ஒருவன் இருப்பதால்தான் நீ உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்உயர்வு தாழ்வு என்பது உயிர்களில் இல்லை... உன்னில் இருந்தால் மண்ணில் நீ இருந்தும் பயனும் இல்லைஉயர்ந்தவனும் தாழ்ந்தவனும் ஒரே வழியில் தான் பிறக்கிறோம்..ஒரே வகையில் தான் வாழ்கிறோம் ஒரே முறையில் தான் மடிகிறோம்....காசு கொடுத்து கடவுளை காணச் செல்லும் என் செருப்பு கோவிலுக்கு வெளியே காசை வாங்கிக் கொண்டு காட்சியளிக்கும் கடவுளின் பாதுகைகோவிலுக்கு உள்ளே....பாதரட்சை என்கிறார்கள்... பாமரன் வழக்கு செருப்பு இரண்டுக்கும் ஒரே பொருள் இரண்டும் ஒரே பயன்...ஒன்றைத் தொட்டு வணங்குகிறான்மற்றொன்றை தொட்டவனையும் தொட மறுக்கிறான்...பாதங்களுக்கு பொருந்தாத செருப்பு எப்படி கடிக்கிறதோ அப்படியே பகுத்தறிவுக்கு பொருந்தாத உங்களின் சித்தாந்தங்களை கடிந்து கொள்கிறேன்....அதிகாரத்தில் இருப்பவன் எந்த சாதிக்காரன் என்று பார்க்காதே சாதித்தான் என்று பார்.அடிமை வர்க்கங்கள் தான் இந்த சாதிகள் என்று ஒதுக்காதே...அறியாமை நீங்கி விட்டால் அடிமைத்தனம் ஓய்ந்துவிடும்....அவன் திரும்ப அடிக்க ஆரம்பித்து விட்டால் அடங்கிவிடும் உங்கள் ஆணவத்தின் ஆட்டம்....அறியாமல் மிதித்து விட்ட முள்ளையே அறிந்து மதித்து கையில் எடுக்கிறாய்வலி உன்னை வழி நடத்துகிறது...அறிந்து மிதித்து விடாதே... அறியும் நேரம் அழித்தே தீரும்... அனைவரும் ஒன்றே.. சாதி எரிந்தே போகும்...இவண்ஆற்காடு குமரன்9789814114
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment