பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday, 9 May 2023
#கேரளா_தானூர்_படகு_விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...ஒரு குடும்பத்தில் 11 பேர் அவர்கள் ஒரு குடும்பம் போல ஒன்றாகவே பயணம் செய்தனர் இன்று அவர்களின் இறுதி உறக்கமும் ஒன்றாகவே நடந்தது...ஒன்றாக விளையாடிய, வீடுகளில் ஒன்றாக உறங்கிய அந்த பிஞ்சு குழந்தைகள் வெள்ளை கஃபன் துணியால் மூடப்பட்டு கடைசி பயணமும் ஒன்றாகவே நடந்தது...வீட்டு முற்றத்தில் ஒன்றாக விளையாடிய குழந்தைகளை இனி வல்ல இறைவன் சொர்க்க முற்றத்தில் ஒன்று சேர்க்கட்டும்...யாஅல்லாஹ் இவர்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக...இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக...இவர்களுக்கு அருளும் செய்வாயாக...இவர்களுக்கு சுகத்தையும் நல்குவாயாக...இவர்களை மன்னித்து விடுவாயாக...இவர்களுடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக...இவர்களுடைய தங்குதலைமிக கண்ணியப்படுத்துவாயாக...இவர்களுடைய நுழைவிடத்தை விஸ்த்தீரணமாக்கித் தருவாயாக...இவர்களுடைய வீட்டை விட மிகச் சிறந்ததான ஒரு வீட்டைஇவருக்கு நீ வழங்குவாயாக...இவர்களுடைய குடும்பத்தை விட மிகச் சிறந்த குடும்பத்தினரைஇவர்களுக்கு நீ மாற்றித் தருவாயாக... இன்னும் இவர்களை மண்ணறை வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக...நரக வேதனையிலிருந்தும் இவர்களை நீ காத்தருள்வாயாக...இவர்களை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக...சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத் - துல் - ஃபிர்தெளஸ் எனும் சொர்க்கத்தை இவர்களுக்கு நீ வழங்குவானாக...இவர்களை பிரிந்து வாடும் இவரின் அன்பு குடும்பத்தார்களுக்கும்,அருமை நன்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், மிக அழகிய பொறுமையை நீ தந்தருள்வாயாக...இன்னா லில்லாஹி மா அகதவலஹு மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹு பி அஜலின் முஸம்மன் ஃபல் தஸ்தபிர்வல் தஹ்தஸிப்...பொருள் : எதை அல்லாஹ் எடுத்தானோ அதுவும்எதை அல்லாஹ் கொடுத்தானோ அதுவும்அல்லாஹ்வுக்கே சொந்தம்...ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்விடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது...எனவே நீங்கள் பொறுமையை மேற் கொண்டு அதற்கான நற்கூலியை மறுமையில் அல்லாஹ்விடம் எதிர் பார்த்திருப்பீர்களாக...அல்லாஹ்விற்காக பொறுமையை கை கொள்ளுங்கள்...“வல் ஹலக்கல் மெளத்த,வல் ஹயாத்த” முஸ்லீம்களின் உண்மையான வாழ்க்கை மரணத்துக்குப் பின்னர் தான் தொடங்குகிறது...அந்த வாழ்வில் அவர்களை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக...ஆமீன்...ஆமீன்...யாரப்பல் ஆலமீன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment