அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 23 August 2024

மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!


மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!

உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்,

*''உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.''*

(ஆதாரம்: அபூதாவூத்)

நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் து'ஆச் செய்வார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ?

 எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் !

ஒரு ஹதீஸ்,

அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; 

*''நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.*

ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை து'ஆ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும்.

மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.

மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்.

"உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்."

ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் து'ஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். 

*மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் து'ஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!*

எனவே அந்த து'ஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.

*அல்லாஹ் மிக்க அறிந்தவன்.*

படித்ததில் பிடித்தது பதிவாளருக்கு நன்றி .....


No comments:

Post a Comment