தலையில்
சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இதற்குக் காரணம் சிரிய அரசின் கடும்போக்கே என்று
எதிரணியினர் கூறியுள்ள போதும் உண்மையில் இதற்கு யார் பொறுப்பென உறுதிப்படுத்த
முடியாதுள்ளது. அதிபர் அசாத்தின் படைகளும் கிளர்ச்சிப் படடையும் கடந்த வருடம் ஜூலை
மாதம் முதல் தீவிரமாக அலெப்போ நகரில் மோதி வருகின்றனர்.
அரபு
உலகத்தில் மிகவும் ரத்தக்கறை படிந்த வன்முறையாக மாறியுள்ள சிரியப் புரட்சியில்
இதுவரை 60'000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை
ஐ.நா இன் அகதிகளுக்கான அமைப்பின் கூற்றுப்படி 700'000 பேருக்கும் அதிகமான அகதிகள்
சிரியாவில் இருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதாகக்
கூறப்படுகின்றது.
இதேவேளை
உலகில் உள்ள வல்லரசுகள் சிரியாவில் நடைபெறும் வன்முறை அண்டை நாடுகளான லெபனான்,
ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகியவற்றுக்கும் பரவி விடக்கூடுமோ எனும் அச்சத்தில்
உள்ளன. மேலும் தற்போது மரணதண்டனை நிறைவேற்றப் பட்டு அலெப்போவின் கியூயெயிக் ஆற்றில்
சேறு படிந்த நிலையில் 51 சடலங்கள் மீட்கப்பட்ட வீடியோவை எதிரணியினர் இணையத்தில்
வெளியிட்டுள்ளனர்.
இதில்
அதிகமானோர் பருவவயதைச் சேர்ந்த பயிற்சி எடுத்து வந்த இளம் போராளிகள் ஆவர். இன்னொரு
பக்கத்தில் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரு ஏவுகணை
எதிர்ப்பு வாகனங்களையும் 400 துருப்புக்களையும் துருக்கியின் அங்காரா நகருக்கு
அனுப்பியுள்ளனர். இதன் நோக்கம் சிரிய இராணுவத்தால் துருக்கிக்கு ஏவுகணைத் தாக்குதல்
அச்சுறுத்தல் இருப்பதனால் ஆகும்.
News
: Source
eutamilar thanks
No comments:
Post a Comment