கோலாலம்பூர், ஜனவரி 30-
பெண் என்பவர் தாயார், மனைவி, பணியாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார்.
நாட்டின் கண்களாக விளங்கும் அவர்களை நாம் மதிப்பது அவசியமாகும். பெண்களின்
பொறுப்புகளை எளிதாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
அதற்கு பெண்களின்
முன்னேற்றத்திற்கு தடையாக விளங்கும், நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறை, நடைமுறை
வழக்கங்கள் மற்றும் சிந்தனை போக்கு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியமான
ஒன்றாகும்.
இவர்களின்
முன்னேற்றத்திற்கு வழிகோலும் பல மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக
தேசிய மகளிர் மன்றத்தின் பொன் விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் தமது உரையில் பிரதமர்
இவ்வாறு கூறினார்.
மகளிர், குடும்ப மற்றும்
சமூக மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ நஜிப், இவ்விவகாரத்தை உடனடியாக
செயலாற்றும் வண்ணம், தேசிய மகளிர் மன்றத்தை பரிந்துரை மற்றும் ஆய்வறிக்கை ஒன்றை
தயார்படுத்துமாறு கூறினார்.
பெண்களின் நிலை மற்றும்
போட்டியாற்றலை மேம்படுத்துவதற்கு முன்பாக அவர்களின் திறனை நிர்ணயிப்பது அவசியம்
என்றார் பிரதமர்.
தற்போது நாட்டில் 46
விழுக்காடு பெண்கள் மட்டுமே வேலை செய்கின்றனர், அதுவும் மாத வருமானம் 3000
ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
/vanakkammalaysia thanks
No comments:
Post a Comment