அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 21 January 2013

ஜப்பான் தீவை தாக்க தயார் நிலையில் சீனா


[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 07:44.23 மு.ப GMT ]
ஜப்பான் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு சீன கடலில் சென்காடு தீவுகள் உள்ளன. எனினும் இந்த தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் சீனா- ஜப்பான் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளும் சென்காடு தீவுகள் அருகே தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளன.
மேலும், ஜப்பானிய ராணுவ ஹெலிகொப்டர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அதைத் தொடர்ந்து சீனாவும் தனது ஹெலிகொப்டர் பிரிவை உஷார்படுத்தியுள்ளது.
சரக்கு போக்குவரத்தில் கவனம் செலுத்துவதை விட தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராக இருக்கும்படி சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தகவலை சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பி.எல்.ஏ. டெய்லி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சென்காடு தீவுகள் பிரச்னையில் ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
தீவுகளில் ஜப்பானின் நிர்வாகத்தை தடுக்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா ஏற்காது என்று சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அப்பகுதிக்கு அமெரிக்கா கண்காணிப்பு கப்பல்களை அனுப்பிவைத்தது. இதற்கு சீனா தனது எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.
newsonews thanks

No comments:

Post a Comment