ஜெஸிந்தாவின் தற்கொலைக்கு காரணமான ரேடியோ நிகழ்ச்சி ரத்து
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 04:14.41 மு.ப GMT ]
லண்டனில் மருத்துவ தாதி தற்கொலை
செய்து கொள்ள காரணமாக இருந்த அவுஸ்திரேலிய ரேடியோ நிகழ்ச்சி ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக
உள்ளார், இதன் காரணமாக லண்டனில் உள்ள எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேடியோ வர்ணனையாளர்கள் லண்டன் மருத்துவமனையை
தொடர்பு கொண்டு, அரண்மனையிலிருந்து பேசுவதாக நாடகமாடி கேத் குறித்த தகவல்களை
சேகரித்தனர்.
இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு
தொலைபேசி இணைப்பு கொடுத்தது மருத்துவ தாதி ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மனவேதனையில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டு வந்த ஹாட் 30 என்ற குறும்பு தனமான
நிகழ்ச்சி தற்போது நீக்கப்பட்டு விட்டது.
அதற்கு பதில் வேறு நிகழ்ச்சி ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்
புரளி கிளப்பிய ரேடியோ வர்ணனையாளர்கள் கிரெய்க் மற்றும் கிறிஸ்டியன் மீது நடவடிக்கை
ஏதும் எடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment