சுலோவேகியா
நாட்டின் பிரெட்டிஸ்லாவா மாகாணத்தில் அமைந்த காமேனியஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த
நடாலியா காமோடையோவா மற்றும் அவரது தலைமையிலான குழு இணைந்து மேற்கொண்ட ஆய்வில்,
காதலர்கள் வாய்வழி முத்தம் பரிமாறி கொள்ளும்போது, பாக்டீரியாவுடன் மரபணுவும்
சேர்ந்து பரிமாறப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக 12
தம்பதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை சுமார் 2 நிமிடங்கள் அன்புடன்
ஒருவருக்கொருவர் முத்தத்தை பரிமாறி கொள்ள செய்தனர். பின்னர் தம்பதிகளில்
பெண்களிடம் இருந்து 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள், 30 நிமிடங்கள் மற்றும் 60
நிமிடங்கள் என்ற கால இடைவெளியில் உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அவற்றை பரிசோதனை
செய்து பார்த்தபோது, குறைந்தது ஒரு மணி நேர கால அளவில் ஆணின் மரபணு அதில் இருந்து
கண்டறியப்பட்டது. அதாவது, ஆணின் ஒய் குரோமோசோம் உமிழ்நீரில் இருப்பதால் மரபணு
இருப்பது உறுதி செய்யப்படுவதுடன் அந்த ஆணின் அனைத்து விவரங்களும் எளிதில்
பெறப்படும். இந்த ஆய்வால், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண், பாதிக்கப்பட்ட
பெண்ணின் உமிழ்நீரை பரிசோதனை செய்வதன் வழியாக எளிதாக கண்டறியப்படுவதுடன்,
நிரபராதிகளை கண்டறிவதும் எளிதாக அமையும்.
இந்த ஆய்வின்
அடுத்த கட்டமாக, பெண்ணின் உமிழ்நீரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மரபணு
உயிரோட்டமாக இருப்பது குறித்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன்,
பாதிக்கப்பட்ட பெண் மரணமடைந்து விட்டால் அவரது உமிழ்நீரில் மரபணுவின் நிலை குறித்து
அறிவதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால்
கற்பழிப்பு, பாலியல் வன்முறை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள் எளிதில்
தண்டனைக்கு உள்ளாவதற்கான சாட்சியங்கள் அதிகரிக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
/thedipaar. thanks
|
No comments:
Post a Comment