புதுடெல்லி:இந்தியாவில் சில உயர் நீதிமன்றங்கள்
முஸ்லிம் போலீஸ் காரர்கள் தாடி வளர்ப்பதற்கு எதிராக இருப்பதை கண்டறிந்ததாக
உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாடி மழிக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு கட்டுப்படாத
ஸாஹிருத்தீன் ஷம்சுத்தீன் என்ற போலீஸ்காரர் மீது மஹராஷ்ட்ரா அரசு ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொண்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு
எடுத்துக் கொண்டது. பின்னர் முஸ்லிம் போலீஸ்காரர்கள் தாடி வைப்பது தொடர்பாக கருத்தை
கேட்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
வழக்கை ஆராய்ந்தபொழுது சில உயர்நீதிமன்றங்கள்
முஸ்லிம் போலீசார் தாடி வளர்ப்பதற்கு எதிராக உள்ளது தெரியவந்துள்ளது என்று
உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மதரீதியான கடமை என்ற அடிப்படையில் வெட்டி ஒதுக்கிய
தாடியை வைக்க முஸ்லிம்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்பது ஸாஹிருத்தீனின்
வாதமாகும்.
மஹராஷ்ட்ரா மாநில ரிசர்வ் போலீசில் 2008-ஆம் ஆண்டு
ஸாஹிருத்தீன் சேர்ந்தார்.மே 2012-ஆம் ஆண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் தாடி வைக்க
அவருக்கு அனுமதி அளித்தனர். மாநில அரசு சேவை கொள்கையில் ஏற்படுத்திய மாற்றத்தைத்
தொடர்ந்து அக்டோபர் மாதம் இது ரத்தானது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை
அணுகியபோது அரசு கொள்கையின் படி தாடி வளர்க்க கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு எதிராகத்தான் ஸாஹிருத்தீன் உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றம்
அனுப்பிய நோட்டீஸிற்கு மத்திய, மஹராஷ்ட்ரா மாநில அரசுகள் ஒரு மாதத்திற்குள் பதில்
அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
thoothuonline thanks
No comments:
Post a Comment