February
18, 2013 07:50 am
உலகின் பழைய உதவி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
தனது 150 வது ஆண்டு நிறைவை நேற்று கொண்டாடியது.
1859 இல் பிரான்ஸ் மற்றும்
ஆஸ்திரியர்களுக்கு இடையே நடந்த போரின் போது சொல்பெரினோ மோதலில்
காயமடைந்தர்கள் அடைந்த துயரத்தை அடுத்து,
அத்தகையவர்களுக்கு உதவுவதற்காக 1863 இல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஜெனிவாவை சேர்ந்த வணிகரான ஹென்றி டுனண்ட் அவர்கள் இதனை
ஆரம்பித்தார். இன்று உலகின் பல யுத்த முனைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் செயற்படுகிறது.
நவீன
ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு
கூறுகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் உயரமான இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்ற
போதிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையாக திருப்தி அடைய முடியாது என்று
ஜெனிவாவுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நாசிக்களின் சித்ரவதை முகாம்கள் குறித்து
மௌனமாக இருப்பது என்று அந்த அமைப்பு எடுத்த முடிவு,
கடுமையான விமர்சனங்களுக்கு வழி செய்தமையுடன்,
இறுதியில் அது குறித்து அது மன்னிப்பு கோரவும்
நேர்ந்தது.
புதிய ஆயுதங்களும்,
போர்க்களக்களில் தோன்றுகின்ற புதிய புதிய நபர்களும் தமது செயற்பாடுகளை
சிக்கலாக்குவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான பீற்றர் மௌரர்
கூறுகிறார்.
அண்மையில் கூட சிரியாவில் ஏற்பட்டுள்ள
சீரழிவு நிலைமையை தம்மால் சமாளிக்க முடியாமல்
இருப்பதாகவும், இந்த
மிகப்பழைய அமைப்பு கூறியுள்ளது.
92 நாடுகளில் இந்த அமைப்பு தற்போது 13, 000 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது.
இன்று உலகின் பல யுத்த முனைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்படுகிறது. நவீன
ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த
அமைப்பு கூறுகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் உயரமான இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்ற
போதிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையாக திருப்தி அடைய முடியாது என்று
ஜெனிவாவுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நாசிக்களின் சித்ரவதை முகாம்கள் குறித்து
மௌனமாக இருப்பது என்று அந்த அமைப்பு எடுத்த முடிவு கடுமையான
விமர்சனங்களுக்கு வழி செய்தமையுடன்,
இறுதியில் அது குறித்து அது மன்னிப்பு கோரவும்
நேர்ந்தது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இன்று,செஞ்சிலுவைச் சங்கங்களின் கூடமைப்பு,
செம்பிறைச் சங்கங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள்
மற்றும் தொண்டர்களைக் கொண்டு செயற்படுகின்றது.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன் போர்க்களங்களில் கைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச
விதிகள் நியமங்களை வலியுறுத்தும் அமைப்பாகவும்,
போர் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பாகவும் செயற்படுகின்றது.
போருகளின் தன்மை இன்று மாறிவருகிறது. புதிய ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பாதிக்கப்படும் பொதுமக்களின் அளவும் அதிகரித்து வருகின்றது.
இந்த
நிலைமைகளில் அந்த அமைப்பின் செயற்பாடும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
சிக்கலடைந்துள்ளது.
சில
அம்சங்களில் ரகசியம் பேணுகின்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போக்கு பல தடவைகள்
விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இலங்கையை பொறுத்தவரை கடந்த மூன்று
வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில்,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு மிகவும் கணிசமாக இருந்ததாக
உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
thamilan. thanks
No comments:
Post a Comment