Monday, 18 February 2013 01:23

1982 ம் ஆண்டில் இந்திய கிரிகெட் வாரியத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் எஸ்.கே.பி சால்வேயின் நினைவுக் கூட்டம் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,
"கடந்த 1982ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு என்னை சிலர் பரிந்துரை செய்தார்கள். இதை நான் ஏற்க மறுத்தேன். காரணம் நான் கிரிக்கெட் ஆடியது இல்லை. அந்த விளையாட்டைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. கிரிகெட் பற்றிய புத்தகம் படித்து இருக்கிறேன். பார்த்து இருக்கிறேன். ஆனால், கிரிகெட் மட்டையைத் தொட்டது கிடையாது. இதனால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தேன்.
இந்த பதவிக்கு நான், எனது நண்பரும், சக காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவருமான சால்வே பெயரை பரிந்துரைத்தேன். எனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார். சால்வே, கடந்த வருடம் தனது 91 வது வயதில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment