புதுடெல்லி:”கோத்ராவில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பது
இப்போதும் மர்மமாகவே உள்ளது’
, 2002-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப்
பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஜெர்மனியில்1933-ம் ஆண்டு
அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை
நமது மக்களும் செய்துவிடக் கூடாது.” என்று குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் விபத்து
சம்பவத்திற்கு பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலை
தொடர்பாக எழுதிய கட்டுரையில் மார்க்கண்டேய கட்ஜு கூறியிருந்தார்.
இதற்கு கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண் ஜெட்லி கூறுகையில், “மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள
கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமை கொண்டு விமர்சிப்பதாக உள்ளது.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து
கட்ஜு உடனடியாக விலக வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அக்கட்சியைச்
சேர்ந்தவர்களையும் விட அதிக விசுவாசமாக செயல்படுகிறார்.
காங்கிரஸ் இல்லாத
கட்சிகள் ஆளும் மாநிலங்களான குஜராத், பீகார், மேற்குவங்கம் என தேர்வு செய்து கட்ஜு
விமர்சிக்கிறார். இதன் மூலம் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தனக்கு
பதவியளித்தவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு
அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை
நமது மக்களும் செய்துவிடக் கூடாது என்று கட்ஜு எழுதியுள்ளார்.
தனது அரசியல்
கருத்துகளை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் இப்போது வகிக்கும் பதவி
அதற்கு ஏற்புடையதல்ல. எனவே அவர் பதவியில் இருந்து விலகிவிட்டு நேரடியாக அரசியலில்
ஈடுடலாம்’ என்று ஜேட்லி கூறியுள்ளார்.
இதற்கு
பதிலளித்து மார்க்கண்டேய கட்ஜு கூறியது:உண்மைகளை மாற்றிவிடலாம் என்று
ஜேட்லி முயற்சிக்கிறார். அரசியலுக்கு தகுதியில்லாத அவர் அரசியலில் இருந்து விலக
வேண்டுமென்று கட்ஜு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் அல்லாத மாநிலங்களை மட்டுமே கட்ஜு
விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பதிலளித்த அவர், “சிவசேனை தலைவர் பால் தாக்கரே
மறைவின்போது ஃபேஸ்புக்கில் அது தொடர்பாக விமர்சித்த இரு பெண்களை மகாராஷ்டிர
போலீஸார் கைது செய்தனர். அப்போது அந்த மாநில முதல்வர் பிருத்வி ராஜ் சவாணுக்கு
கடுமையாகக் கடிதங்களை எழுதினேன். இமாசலப் பிரதேச முதல்வர் வீரபந்திர சிங்,
ஊடகங்களின் கேமராக்களை உடைத்துவிடுவேன் என்று ஆவேசப்பட்டபோது, கடுமையான கண்டனம்
தெரிவித்தேன். இவர்கள் இருவருமே காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான்.
பீகார் அரசு
பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது என்பது நான் கூறியது அல்ல. இந்திய பத்திரிகை
கவுன்சிலின் 3 நபர் குழு அளித்த அறிக்கை. அதனை எனது கருத்து என்று கூறி உண்மைக்குப்
புறப்பாக ஜேட்லி பேசியுள்ளார் என்று கட்ஜு கூறினார்
thoothuonline thanks
No comments:
Post a Comment