அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 February 2013

சுரேஷ் கல்மாடி மீது இன்று டெல்லி நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்




காமன்வெல்த் கேம்ஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது சகாக்கள் மீது இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மோசடி, போலி ஆவணங்கள பயன்படுத்தியமை, கிரிமினல் மிரட்டல், ஆதாரங்களை அழித்தமை என பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிறப்பு சிபிஐ நீதிபதி ரவீந்தர் காவூர் முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டது.

சுரேஷ் கல்மாடியுடன், ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச்செயலாளர் லலித பானொத், முன்னாள் இயக்குனர் வி.கெ.வர்மா, சுஜித் லால், ஏ.எஸ்.வி பிரசாத், முன்னாள் பொருளாளர் எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீதும் இக்குற்றப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பெப்.20ம் திகதி குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி அறிவித்துள்ளார். பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

2010 இல் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது பாரிய முறைகேடு நடைபெற்றதாகவும் சுமார் ரூ 90 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டிருந்தாகவும் முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

போட்டிகளின் போது நேரக்கணிப்பீடு, ஸ்கோர் விபரம், முடிவுகள் என்பவற்றை கையாளவதற்கு சுவிற்சர்லாந்தின் முன்னணி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டதில் பாரிய ஊழல் முறைகேடு நடைபெற்றிருந்ததாக இக்குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது.

 4tamilmedia. thanks

No comments:

Post a Comment