- Monday, 04 February 2013 08:40

வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை பயன்பாட்டை ஊக்குவிக்க, காசோலை பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அதாவது வங்கிகளில் காசோலைகள் மூலம் பணத்தை பெறும்போதும், எடுக்கும்போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வங்கிகளில் இருந்து பொது மக்கள் மேற்கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. அவர்கள் திரும்பப் பெறும் தொகையும் உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணாவதுடன், வங்கி ஊழியர்களுக்கு பணி சுமையும் கூடுகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசவ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்த பரிவர்த்தனையை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது, வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. எனவே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப் படும் பரிவத்தனைகளை மேற்கொள்பவர்களுக்கும் சலுகையும், காசோலைகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு கட்டணமும் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்த வழிமுறை மூலம் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு வசூலிக்கப்படும் சிறிய கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி இரத்து செய்யவுள்ளது. மேலும் வங்கிகளில் வழங்கப்படும் இலவச காசோலை புத்தகங்களையும் குறைக்கும் அதிரடி முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் அமலுக்கு வரும் நிலையில், ரொக்கமாக பணத்தை கையாள்வது குறைந்து ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்பதும், இந்த முறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய விழிப்புணர்வு செயல் திட்டமாகவும் இது இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது
.4tamilmedia. thanks
No comments:
Post a Comment