அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 February 2013

பெண்களுக்கு விந்தணுவை மாற்றிச் செலுத்திய டாக்டர்!


பெண்களுக்கு விந்தணுவை மாற்றிச் செலுத்திய டாக்டர்!

February 4, 2013  02:49 pm

செயற்கை கருவூட்டலுக்காக வந்த பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தணுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுவைத் தவறுதலாக செலுத்தி விட்டார் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர். தான் செய்தது தவறு என்பதை தற்போது அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 



கனடாவைச் சேர்ந்த டாக்டர் நார்மன் பர்வின். இவர் மிகச் சிறந்த, புகழ் பெற்ற மகப்பேறு குறைபாடு நீக்கு மருத்துவர் ஆவார். கனடாவில் மிகவும் பிரபலமானவர். இவரது மருத்துவ அறிவும், திறமையும் மிகவும் பிரபலமானது. மேலும், கருக்கலைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அதைப் பெண்களின் உரிமையாக கூறி வருபவர். இந்த நிலையில் இவர் மிகப் பெரிய தவறு ஒன்றைச் செய்துள்ளார். அது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தத் தவறை அவர் 12ஆண்டுகளுக்கு முன்பு செய்துள்ளார். அதாவது தன்னிடம் செயற்கை கருத்தரிப்புக்காக வந்த 3பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தணுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தணுக்களை தவறுதலாக இவர் செலுத்தி விட்டார்.


இதுதொடர்பாக பின்னர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின்போது தனது தவறை டாக்டர் நார்மன் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த மூவரில் ஒருவருக்குமே மட்டுமே தன் மகனுக்கு 23 வயதான பின்னர் அவன் தந்தை போலும் இல்லை, தாய் போலும் இல்லை எனத் தெரிய வந்ததால் மரபணுச் சோதனை செய்துள்ளனர். மகனின் மரபணு பெற்றோர் இருவரின் மரபணுவையுமே ஒத்துப் போகவில்லை. இதையடுத்தே டாக்டரின் தவறு தெரிய வந்தது. மற்ற இரு பெண்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

thamilan. thanks

No comments:

Post a Comment