February 4,
2013 02:59 pm
அமெரிக்கா- ரஷ்யா இடையே உறவில் மற்றொரு விரிசலாக
அமெரிக்காவின் இறைச்சிக்கு ரஷ்யா திடீர் தடை
விதித்திருக்கிறது. ரஷ்யாவில் அமெரிக்கர்கள் குழந்தைகளைத் தத்து எடுக்க ஏற்கெனவே
ரஷியா அதிரடியாக தடை விதித்து. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின்
இறைச்சிக்கு தடை விதித்திருக்கிறது. ரஷ்யாவின் தேவையில் 7.5
வீதம் மாட்டு இறைச்சியும் 11
வீதம் பன்றி இறைச்சியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த இறக்குமதிக்கு வரும் 11-ந் திகதி முதல் தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.
ரஷ்யாவின் தடை மூலமாக ஓராண்டில் 500
மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என்று அமெரிக்க வர்த்தகர்கள்
தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இறைச்சிக்கு சீனா மற்றும் ஐரோப்பா
ஏற்கெனவே தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
/thamilan thanks
No comments:
Post a Comment