அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 March 2013

தஞ்சை பெரிய கோவிலில் இலங்கை புத்த பிட்சு மீது தாக்குதல்: 15 பேர் கைது

[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 
இலங்கை புத்த மத பிட்சு தலைமையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆய்விற்க்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழ் அமைப்பை சேர்ந்த 15 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை புத்த மத பிட்சு தலைமையில், தாய்லாந்து, இந்தோனேசியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 19 மாணவர்கள் ஆய்விற்காக தஞ்சாவூர் சென்றனர்.

இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்பினர், போராட்டத்தில் ஈடுப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலுக்கு அஞ்சி இலங்கையை சேர்ந்தவர்கள் தஞ்சை தொல்லியில் துறை அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். போராட்டகாரர்களை கைது செய்த பின்னர் இலங்கை புத்தமத பிட்சு மற்றும் அவரது மாணவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.
சென்னையில் ரயில் மறியல்: இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச-வை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலை சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 15 நிமிடங்கள் தாம்பரம் - கடற்கரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களின் சைதாப்பேட்டை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டத்தை கைவிட நாம் தமிழர் கட்சியினர் மறுப்புதெரிவித்தனர். அதனால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
newindianews thanks

No comments:

Post a Comment