8 வயது சிறுமி சிதைக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு
மார்ச் 2013,
மத்திய
பிரதேச மாநிலம், போபாலில் கடந்த மாதம் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், மாநில உள்துறை அமைச்சர் உமா ஷங்கர்
குப்தாவின் வீடு அருகே கைப்பற்றப்பட்டதால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில் நந்தகிஷோர் வால்மீகி
என்பவன் கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கு விசாரணை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த
வியாழக்கிழமை, நீதிபதி சுஷ்மா கோஷ்லா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி
நந்தகிஷோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஒன்பது நாட்களுக்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுஷ்மா கோஷ்லா பேசியதாவது,
நந்தகிஷோரின் இந்த செயல், பெரும் அவமானத்திற்குரியது. குற்றவாளியின் வெறிச்
செயலுக்கு, தூக்கு தண்டனையே குறைந்த பட்ச தண்டனையாக கருதுகிறேன்.
எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரத்துக்கு
உட்படுத்தியுள்ளான். சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றதோடு, அதை மறைக்க, அவளின்
முகத்தை சிதைத்து தெருவில் வீசியுள்ளான்.
மற்றவர்கள் இது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடாமல் இருக்கவே, இந்த கடுமையான
தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி கூறினார்.
No comments:
Post a Comment