March 23,
2013 01:38 pm
கிழக்கு பங்களாதேஷில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக
20 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரமன்பாரியா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள்
இந்த புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த புயல் காற்றில்
மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசு அதிகாரி நூர் முஹம்மது மஜும்தர்
கூறியுள்ளார்.
/thamilan. thanks
No comments:
Post a Comment