March 23, 2013
தாய்லாந்தின் குன் யுவாங் மாவட்டத்தில் மியான்மர் அகதிகள்
தங்கியுள்ள சிறப்பு முகாம் உள்ளது. பான் மயி சுரின் அகதிகள் முகாம்
என்றழைக்கப்படும் இந்த முகாமில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள்
தங்கியுள்ளனர்.
நேற்றிரவு இந்த முகாமில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில்
100 தற்காலிக கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம்
போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உடல் கருகி
பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்
பலர், பலத்த
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத் தீ முகாமில் உள்ள கூடாரங்களைப் பற்றியதால் இந்த
விபத்து ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், அஜாக்கிரதையாக சமையல் செய்ததே காரணம் என மற்றொரு பிரிவினரும்
கூறுகின்றனர்.
thamilan thanks
No comments:
Post a Comment