March 16,
2013 12:31 pm
தென்
ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் இருந்து நேற்று 60 பயணிகளை
சுமந்தபடி இரட்டை மாடி பஸ் ஒன்று ஹெக்ஸ்
ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தது.
வளைவுகள் நிறைந்த குறுகலான மலைப்பாதையில் சென்ற போது
´பிரேக்´ செயலிழந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பயங்கர
சப்தத்துடன் மலை மீது மோதி கவிழ்ந்தது.
இந்த
விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 24 பேர்
சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30க்கும்
மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை
அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
thamilan thanks
No comments:
Post a Comment