அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 March 2013

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மாநிலத்தில் 2 ஆவது இடம்



First Published : 24 March 2013 12:36 AM IST
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவத்தில் மாநில அளவில் சாதனை புரிந்து 2 ஆவது இடத்தை பிடித்திருப்பது பெருமையாக இருப்பதாக கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் கூறினார்.

  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ரூ.1.2 கோடி மதிப்பிலான புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை இயக்கி வைத்து அவர் பேசியதாவது:
  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 11 மாதங்களில் 5,43,000  வெளிநோயாளிகளும், 1,29,193 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். 3,278 பிரசவங்கள் நடைபெற்று மாநில அளவில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  தற்போது 90 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ஒரு தாய்க்கு ரூ.12 ஆயிரம் அரசு வழங்குகிறது. வீட்டில் நடக்கும் பிரசவங்கள் தற்போது இல்லை.
  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை 1,350 கண்புரை அறுவைச் சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தேசிய அளவில் ராமநாதபுரம்  தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கண் மருத்துவப் பிரிவு 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு செயல்படும் மருந்தகம் மற்ற மருத்துவமனைகளுக்கு முன்மாதிரி மருந்தகமாகச் செயல்பட்டு வருகிறது.
  மருத்துவக் கல்லூரிக்கு ஒப்பான வகையில் தலைமை மருத்துவமனை தரம்  உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விரைவில் மருத்துவக்  கல்லூரி துவங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.
  அண்மையில் சி.டி. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டது. தற்போது ரூ.1.2 கோடி மதிப்பில் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும் நிறுவப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர் கோபுர ஹைமாஸ் விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. மருந்துக் கிடங்கு ரூ.6 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
  வரக்கூடிய வியாதிகளை மக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் தான் எந்த வியாதியும் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அமைச்சர்.
  விழாவிற்கு நலப்பணிகள் துறையின் இணை இயக்குநர் ஏ.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் கவிதா சசிக்குமார், நகராட்சி ஆணையர் எஸ்.முஜ்புர் ரகுமான், காசநோய் பிரிவு துணை இயக்குநர் பழனிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  டாக்டர் சாதிக் அலி வரவேற்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கலிலூர் ரகுமான் மருத்துவமனையின் சிறப்பான செயல்பாடுகளை விவரித்தார்.
  மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ் நன்றி கூறினார்.
  சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கினார்.
  இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.சி.ஆனிமுத்து, பயனாளிகள் நலச்சங்க  உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

news dinamani. thanks

No comments:

Post a Comment