அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

கோவாவில் இருந்து மும்பை வந்தபோது ஆற்றில் பஸ் கவிழ்ந்து 37 பேர் பலி







05:47:40Wednesday2013-03-20

MORE VIDEOSமும்பை: கோவா வில் இருந்து மும்பை நோக்கி வந்த சொகுசு பஸ், ரத்னகிரி அருகே பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 37 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.கோவா மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, மகாகாளி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று மும்பைக்கு புறப்பட் டது. அதில்,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 52 பேர் இருந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ரத்னகிரி மாவட்டம் கேட் அருகில் பர்னா என்ற இடத்தில் உள்ள ஜக்புதி ஆற்று பாலத்தில் பஸ் வந்தது. அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.பாலத்தின் மீது பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, திடீரென ஆற்று பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக பஸ்சை டிரைவர் அதி வேகமாக ஓட்டிய போது, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாக விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தது.இதற்கிடையே, பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 37 பேர் இறந்து கிடந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. டிரைவர், வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கேட் மற்றும் சிப்லுனில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலருடைய நிலைமை கவலை க்கிடமாக இருந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக மும்பைக்கு கொண்டு வரப்பட்டனர்.ஆற்றில் கவிழ்ந்த பஸ் முற்றிலும் சேதமடைந்த நிலையில் நேற்று பிற்பகலில் வெளியே எடுக்கப்பட்டது. பஸ்சுக்குள் யாரா வது சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், பஸ்சுக்குள் யாரும் இருக்கவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மது அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

3 ஆண்டில் 828 பேர் பலி
கோர விபத்து குறித்து சட்டப்பேரவையில் நேற்று தகவல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், ‘‘மும்பை&கோவா நெடுஞ்சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 828 பேர் இறந்துள்ளனர், 2,411 பேர் காயமடைந்துள்ளனர். மும்பை&கோவா நெடுஞ்சாலையில் தற்போது 7 போலீஸ் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் வாகன போக்குவரத்தை இந்த மையங்கள்தான் கவனித்து கொள்கின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, இருவழிப் பாதையாக இருக்கும் மும்பை&கோவா நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது’’ என்றார்.

dinakaran thanks


No comments:

Post a Comment