அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

விலகல் என்ற பெயரில், மத்திய அரசை மிரட்ட முயற்சிக்கிறது: தி.மு.க. மீது சமாஜ்வாடி குற்றச்சாட்டு


புதுடெல்லி, மார்ச் 20-

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகுவதாக, தி.மு.க. நேற்று காலை அறிவித்தது.

அந்த கட்சிக்கு பாராளுமன்ற மக்களவையில் 18 எம்.பி.க்கள் உள்ளனர். 22 எம்.பி.க்களை கொண்ட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது.

தி.மு.க.வின் விலகல் முடிவு பற்றி, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கருத்துதெரிவித்து இருக்கிறார். டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'அரசுக்கு அளித்து வந்த ஆதரவை யாரும் விலக்கிக்கொள்ளவில்லை. மத்திய அரசை மிரட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி இது. மத்திய அரசு ஸ்திரமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

'தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறவும் இல்லை. வாபஸ் பெற விரும்பவும் இல்லை. விலகல் குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக தி.மு.க. எதுவும் கொடுத்து இருக்கிறதா?' என்றும், ராம்கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சமாஜ்வாடி கட்சி ஆதரிக்குமா? என்று கேட்டதற்கு, முதலில் தீர்மானம் வரட்டும். பின்னர் அதுபற்றி பார்க்கலாம் என்று, அவர் பதில் அளித்தார். 

 maalaimalar thanks

No comments:

Post a Comment