அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பில் 65 பேர் பலி - அமெரிக்கா கடும் அதிருப்தி



இன்று செவ்வாய்க்கிழமை ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு 10 வருடங்கள் நிறைவடைந்த தருணத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 65 பொது மக்கள் பலியாகியுள்ளனர். இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
.
மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்து தாயகம் திரும்பி வரும் நிலையில் அங்கு அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ள இச்சம்பவம் இத்தகைய பிரேயத்தனத்துக்குப் பின்னும் அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு உறுதியான உதாரணமாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி அங்கு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 92 பேர் பலியானதில் இருந்து நடைபெற்ற மிக மோசமான தாக்குதலாக இத்தாக்குதல் பதிவாகியுள்ளது.
ஈராக்கில் உள்ள இரு பெரும் இஸ்லாமியப் பிரிவுகளான சுன்னி மற்றும் ஷைட்டி இனங்களுக்கு இடையே வன்முறை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் 2006 - 2007 இற்கு இடையில் இது ஒரு மக்கள் யுத்தத்துக்கு அண்மையில் இது சென்றிருந்தது. இந்நிலையில் பத்து வருடங்களுக்கு முன்னர் வாஷிங்டன் டைம்ஸில் வெளியான தகவல் படி அமெரிக்க முன்னால் அதிபர் ஜோர்ஜ் W புஷ் ஈராக்குக்கு எதிராகப் போரை அறிவித்திருந்ததுடன் அங்கு வான் வழியாக அமெரிக்க விமானப் படை மார்ச் 20 2003 இல் தாக்குதல்களைத் தொடங்கியும் இருந்தன.
இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் ஈராக்கின் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் ஆட்சியைக் கவிழ்த்து தூக்கிலிட்ட போதும் சுன்னி மற்றும் ஷைட்டி பிரிவு முஸ்லிம்களுக்கிடையேயும் அவர்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் 4500 அமெரிக்கப் படைகளும் 100 000 ஈராக்கியர்கள் வரையும் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர். தற்போது அங்கு அரசியல் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை அற்றுள்ள போதும் சதாம் ஹுசைன் ஆட்சியில் இருந்த போது நிலவிய வன்முறையை விடக் குறைவாகவே உள்ளது என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னணியில் ஈராக்கில் இயங்கி வரும் அல்கொய்தா கிளை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் பக்தாத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் திட்டமிடப்பட்டு அடுத்தடுத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment