அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

பாலியல் குற்றத்தடுப்பு மசோதா : நேற்று லோக்சபாவில் நிறைவேற்றம்!




பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 எனினும் இந்த மசோதா நிறைவேறும் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் எவரும் அவையில் இல்லை.


டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததுடன், அதற்கான புதிய மசோதாவை மத்திய அரசு தயாரித்தது.

இது தொடர்பில் நேற்று முன் தினம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், ஒருவரின் அனுமதியுடன் பாலியல் உறவு பேணுவதற்கான வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து அந்த திருத்தத்தை தவிர்த்து ஏனைய திருத்தங்களுடன் இறுதி மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அனைத்து கட்சிகளும் புதிய மசோதாவை ஏற்றுக்கொண்டதால், இம்மசோதா சட்டமூலமாக்கப்படுகிறது.

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் முக்கிய தீர்மானங்கள் :

சம்மதத்துடன் பாலியல் உறவு பேணும் வயது வரம்பு 18 ஆகவே இருக்கும். தனியாகவோ, குழுவாகவோ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தது 20 வருடகால சிறைத்தண்டனை, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டாலோ, அல்லது பாலியல் தாக்குதலினால் ஒரு பெண் கோமா நிலைக்கு சென்றாலோ, உயிரிழந்தாலோ குற்றவாளிக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

ஆசிட் வீச்சு முதன்முறையாக குற்றமாக அறிவிக்கப்படுகிறது. ஆசிட் வீசுபவர்களை எதிர்த்து பெண்கள் தாக்குதல் நடத்தினால், அது தற்காப்பாக கருதப்படும்.  குற்றவாளிகளுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பெண்களை பின் தொடர்வது, மற்றவர்கள் உறவில் ஈடுபடும் போது மறைந்திருந்து அவதானிப்பது, பாலியல் தொல்லைகள் ஆகிய குற்றங்கள் குறித்த விளக்கமும், அதற்கான தண்டனையும் இம்மசோதாவில் இடம்பெறும். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அந்த பெண்களுக்கு உடனடியாக இலவசமாக முதல் உதவி அளிக்க வேண்டும்.



4tamilmedia thanks

No comments:

Post a Comment