அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 March 2013

ராமநாதபுரத்தில் தீவிர வாகன சோதனை: ரூ ஒரு லட்சத்து 74 ஆயிரம் அபராதம் வசூல்



ராமநாதபுரத்தில் கடந்த மாதம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில் 727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 606 வழக்குகளில் ரூ ஒரு லட்சத்து 74 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 ராமநாதபுரம் சரக போலீஸ் டிஐஜி ராமசுப்பிரமணி, மாவட்ட காவல் காண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் நகரில் கடந்த மாதம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 இச்சோதனையில் அதிக வேகத்தில் சென்ற ஒருவர் மீதும், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத 125 பேர் மீதும், அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்ற 19 பேர் மீதும், வாகனங்களில் கூலிங் பேப்பர் ஒட்டியிருந்த 17 பேர் மீதும், கண் கூசும் விளக்குகளை பொருத்தியிருந்த 5 பேர் மீதும், குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 62 பேர் மீதும், தலைக் கவசம் அணியாத 160 பேர் மீதும், இதர பிரிவின் கீழ் 296 பேர் மீதும்,ஆக மொத்தம் 727 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்த வழக்குகளில் இதுவரை 606 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 121 பேரிடம் நீதிமன்றம் மூலம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

dinamani. thanks

No comments:

Post a Comment