அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 March 2013

மனைவி பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்

[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013,
மாமல்லபுரம் கோவளம் சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது34) வெல்டிங் வேலை செய்து வரும் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ரமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மைத்ரேயன் (வயது4), சவுஜன்யா (வயது2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ரமணி மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் உள்ள செயின்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததோடு அவருடைய மகன் மைத்ரேயனும் அதே பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை ரமணி கண்டித்துள்ளார். மேலும் ரமணி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார்.

நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், ரமணி சமையல் செய்து சாப்பிட்டு விட்டு மாலை 4 மணி அளவில் தன் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மணிகண்டன் மனைவியிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் படுக்கை அறையில் மனைவி ரமணியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

மனைவி உயிர் பிரிந்தவுடன் சிறுவன் மைத்ரேயன் கழுத்தையும் கத்தியால் அறுத்து துடிக்கத்துடிக்க கொன்றார். பின்னர் 2 வயது குழந்தை சவுஜன்யாவின் கழுத்தை கையால் நெரித்து கொலை செய்து விட்டு அந்த அறையில் இருந்த மின்விசிறியில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை 6 மணி அளவில் ரமணியின் தம்பி கோபி வழக்கம் போல் அக்காவையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எட்டிப்பார்த்தபோது தனது அக்காவையும், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் தூக்கில் தொங்கிய காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன், ரமணி 2 குழந்தைகளின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். நெஞ்சை உருக வைத்த இந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

newindianews thanks

No comments:

Post a Comment