ராமநாதபுரம், மார்ச் 17-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்களது மகன் ஜானகிராமன் (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கீழக்கரையில் உள்ள கீழதெருவில் அபுபக்கர் என்பவர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
வேலைக்கு சேர்ந்து 2 மாதமே ஆகிறது. ஜானகிராமன் நேற்று வேலைக்கு சென்றார். அப்போது அவர் கீழக்கரை ரோட்டில் நடந்து சென்ற பெண்களை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களிடம் இது குறித்து பெண்கள் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஜானகிராமனிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜானகிராமனை சரமாரியாக அடித்து உடைத் தனர்.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் வாலிபர்கள் அனைவரும் ஓடி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாகி விட்ட வாலிபர்களை தேடி வருகிறார்கள். வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar thanks
No comments:
Post a Comment