கிள்ளான், மார்ச் 22- சிலாங்கூரைச் சேர்ந்த 40க்கும்
மேற்பட்ட இந்தியர்கள் அடையாள அட்டை கோரி கிள்ளான் பதிவு மையத்தில் ஒன்று
கூடினர்.பி.கே.ஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் தலைமையில் நடந்த இந்த 2 மணி நேர
ஒன்று கூடலில் மலேசியாவில் பிறந்து வளர்ந்து இன்னும் அடையாள அட்டை கிடைக்காமல்
தவிக்கும் இந்தியர்கள் கலந்துக் கொண்டு தங்களது உரிமையைக் கோரினர். 60, 70
வயதாகியும் அடையாள அட்டை கிடைக்காமல் பலர் உள்ளதாலும் அடையாள அட்டை இல்லாததனால்
பள்ளிக்குச் செல்ல முடியாமல் பல நமது இந்திய மாணவர்கள் தவிப்பதால் இந்த உடனடி
எதிப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அடையாள அட்டை பெறுவதற்காகப் பல முறை
விண்ணப்பித்தும் பல காரணங்கள் காட்டி பதிவு மையங்கள் தங்களது விண்ணப்பங்களை
நிராகரித்து விட்டதாகப் பாதிக்கப்பட்ட பொது மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைவருக்கும் மீண்டும் விண்ணப்பிப்பதற்காண
விண்ணப்ப பாரங்கள் கொடுக்கப்பட்டன. அப்பாரங்கள் பிறகு கிள்ளான் பதிவு மையத்திற்கு
வருகைப் புரிந்திருந்த ஷா அலாம் பதிவு மையத்தின் துணை அதிகாரியிடம் ஒப்படைப்பட்டன.
இதன் வழி பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு விரைவில் அடையாள அட்டை கிடைக்கும் என
பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
/vanakkammalaysia thanks
No comments:
Post a Comment