அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

மத்திய அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக. கருணாநிதியின் அதிரடி அறிவிப்பு.

19  March  2013   
www.thedipaar.com



கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் கைப்பாவையாக எதற்கெடுத்தாலும் தலையாட்டிக்கொண்டு இருந்த திமுக மிகவும் தாமதமாக மத்திய அரசு கூட்டணியில் இருந்து இன்று வெளியேறுவதாக கருணாநிதி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த கருணாநிதி, இலங்கைக்கு எதிரான அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுகவின் கோரிக்கையை இந்திய அரசு செவிசாய்க்காததால் இனியும் மத்திய அரசில் நீட்டிப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என கருதி, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது.


இதனால் டெல்லியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு திமுக அளித்து வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றுள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து சோனியா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் கூட இருக்கின்றது.

அதே சமயம், 21ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் இந்திய அரசின் நிலை என்ன என்பதை பொறுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக ராஜபக்சே எதுவும் செய்யவில்லை என்று கூறிய கருணாநிதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தி்த்து பேசும் திட்டம் இல்லை என்றார்.

மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை செய்கிறது என்றும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.

thedipaar thanks

No comments:

Post a Comment