அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 March 2013

ஈழப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு மம்தா திடீர் ஆதரவு


ஈழப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு மம்தா திடீர் ஆதரவு


March 21, 2013  11:01 am
இந்திய மத்திய அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் விலகிவிட்டது.


தற்போது இலங்கை தமிழர் பிரச்சினையில், கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.வும் விலகிவிட்டது.

இதனால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மத்திய அரசுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் கைகொடுக்க முன்வந்துள்ளன.

ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இந்த கட்சிகள், தங்கள் ஆதரவு நீடிக்கும் என்று அறிவித்து உள்ளன.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் திடீர் திருப்பமாக, மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் இலங்கை தமிழர் பிரச்சினையில், இந்திய மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

இந்த தகவலை மம்தாபானர்ஜி, தனது இணைய தளத்தில் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது...

´இலங்கை பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய உணர்வுகளை பகிர்ந்துகொள்வதுடன், இந்த பிரச்சினையில் முழுமையாக அவர்களுடன் இருப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, நெருக்கடியான தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளை மத்திய அரசுக்கே விட்டு விடுவதைத்தான், முதலில் இருந்தே நாங்கள் பின்பற்றி வருகிறோம். இப்போதும் அதையே செய்வோம்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்குமோ அதற்கு ஆதரவு தெரிவிப்போம்´.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார்.

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் நேற்று காலை மம்தா பானர்ஜியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் மம்தா பானர்ஜி அரசுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

thamilan thanks

No comments:

Post a Comment