March 21,
2013 09:13 am
தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று
அதிகாலை 3 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை
தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக இந்திய
ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிபிஐ
சோதனை நடைபெறுவதை திமுக தரப்பும், சிபிஐ
அதிகாரிகள் வட்டாரமும் உறுதி செய்துள்ளன.
திடீர்
சோதனைக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. சிபிஐ சோதனை தொடர்பாக
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகாத நிலையிலும், உதயநிதி
ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு கார் தொடர்பாக இந்த சோதனை
நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு
முறையான ஆவணம் இருக்கிறதா, சரியான
தொகை செலுத்தப்பட்டதா என அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர
வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.
ஆனால்
மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை (19.03.13), திமுக
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
thamilan thanks
No comments:
Post a Comment