அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 19 March 2013

திருடர்களை கொலை செய்து தலைகீழாக தொங்க விட்ட எகிப்திய மக்கள்

[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 
பட்டப் பகலில் வீதியில் மோட்டர் ரிக்‌ஷா திருடி அகப்பட்ட இரு இளைஞர்களை பொதுமக்களே கொலை செய்து தலை கீழாக தொங்க விடப்பட்ட சம்பவம் எகிப்தில் நடந்துள்ளது. இந்த இரு இளைஞர்களையும் விசாரணைக்காக பொலிசிடம் ஒப்படைக்காமல் நூற்றுக் கணக்கில் மக்கள் ஒன்று கூடி அவர்களை நையப் புடைத்து சட்டையைக் கழற்றி இரு கால்களிலும் கயிற்றினால் கட்டி நைல் நதிக்கரையோரத்தில் நகர மத்தியில் உள்ள மக்கள் நெருக்கடி மிக்க பேருந்து நிலையத்தில் தலைகீழாகத் தொங்க விட்டனர்.
இக்காட்சியை அங்கு ஒன்று கூடிய 3000 பேர் கண்டதுடன் சிலர் தமது கமெராக்களினால் புகைப்படமும் எடுத்தனர்.
இதேவேளை இவர்கள் திருடிய ரிக்‌ஷாவின் உள்ளே ஒரு யுவதி இருந்ததாகவும் ஆனால் அவர் இறுதியில் தப்பித்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொடூரத்தை பத்திரிகைக்காகப் புகைப்படம் எடுக்க நிருபர் ஒருவர் முனைந்த போது அவரையும் கொன்று விடுவதாக மக்கள் கூட்டம் அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.


newsonews thanks

No comments:

Post a Comment