மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலாக உள்ளேன்: சீனா பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013,
இந்தியாவுடனான உறவு மேம்பட சீன
பிரதமர் ஷி ஜிங்பிங் 5 கொள்கைகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா- சீனா இடையிலான எல்லை விவகாரம் மிகவும்
சிக்கலானது.
இதனைதீர்க்க சிறிது காலம் தேவை என்றாலும் எல்லை விவகாரத்தில், இரு நாடுகளும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
எல்லை விவகாரத்திற்கு இறுதித்தீர்வு எட்டப்படும் வரை இரு நாடுகளும்
எல்லைப்பகுதியில் அமைதியை தொடர வேண்டும்.
எல்லை விவகாரம், இரு நாட்டு உறவுகளை பாதிக்காமல் இருக்குமாறு சீனாவும்
இந்தியாவும் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலாக உள்ளேன் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment