அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

அமெரிக்க சர்வதேச விமானநிலைய அறிவிப்பு பலகை அறுந்து சிறுவன் பலி!



on 23 March 2013.
அமெரிக்காவின் (Alabama) அலபாமா மாநிலத்தின், Birmingham - Shuttlesworth சர்வதேச விமானநிலையத்தில், புதிய பகுதி ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு, மார்ச் 13ஆம் தேதி, பொதுமக்களின் உபயோகத்திற்காக திறந்துவிடப்பட்டது. அங்கு, வாகனங்கள் நிறுத்தும் இடம், குழந்தைகள் விளையாடும் பகுதி...,

உணவிடங்கள், சாமான்கள் வைக்கும் அறைகள் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விமானங்களின் விபரங்களைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகளும் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்தன. நேற்று, 1.30 மணி அளவில் பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை ஒன்று அறுந்து விழுந்தது.

 

அதனடியில் சிக்கிக்கொண்ட மக்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் லியுக் ப்ரசெட் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. யு ஏ பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, விமான நிலைய நிர்வாகிகளுக்கு அந்தப் பலகை விழுந்ததன் காரணம் தெரியவில்லை.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment