அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 22 March 2013

பரிசாக அளித்த செடியை பரிசோதித்த இஸ்ரேல் ராணுவம்: ஒபாமாவுக்கு எரிச்சலையூட்டிய இஸ்ரேல் சுற்றுப்பயணம்!



US President Barack Obama visit
டெல்அவீவ்:டீசலுக்கு பதிலாக பெட்ரோலை ஊற்றியதால் கார் ஓடாமல் மக்கர் பண்ணியது ஒபாமாவின் இஸ்ரேல் யாத்திரையில் எரிச்சலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரசுக்கு பரிசாக அவரது வீட்டில் ஒபாமா நட்ட செடியை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கி சோதித்ததும் சர்ச்சையை கிளப்பியது.

’தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஜெனரல் மோட்டார்ஸ் ஒபாமாவுக்காக பிரத்யேகமாக தயாரித்த ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனத்தில் டீசலுக்கு பதிலாக பெட்ரோலை டிரைவர் ஊற்றியதால் ஓடாமல் நின்றுவிட்டது. இதனால் டெல் அவீவ் விமான நிலையத்தில் இருந்து ஜெருசலத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக ஒபாமா சென்றார். பின்னர் அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக வேறொரு கார் கொண்டுவரப்பட்டது.
பத்திரிகையாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் வெளிநாட்டுப் பயணத்தில் ஒபாமாவுடன் செல்வது வழக்கம். இஸ்ரேலிலும் இதே எண்ணிக்கையிலான நபர்கள் உடனிருந்தனர்.
இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரஸின் வீட்டுக்குச் சென்ற ஒபாமா அவருடன் இணைந்து அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த மங்கோலிய நாட்டுச் செடியை நட்டார். பின்னர் ஒபாமா கிளம்பிய பிறகு அச்செடியை பிடுங்கி இஸ்ரேல் ராணுவம் பரிசோதித்தது. இஸ்ரேல் சட்டப்படி வெளிநாடுகளிலுள்ள செடிகளை பரிசோதிக்க வேண்டும். அதனடிப்படையில் பரிசோதித்ததாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்தது

.thoothuonline. thanks

No comments:

Post a Comment