அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

பொதுமக்கள் படுகொலை குறித்து விசாரணை மேற்கொள்ளாவிடில் அடுத்த நடவடிக்கை! இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை





 March 23, 2013  
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப்போரின் போது, அரசபடையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி, இலங்கையிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் நேற்று வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவர்கள் அனைத்துலக சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியும், நாம் 2012ல் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவை,தீர்மானம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
நாம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
வாசிங்டனுக்கு வந்த இலங்கையின் மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், நாம் மிகத்தெளிவாகவே கூறியிருந்தோம்.
நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்களிடம் கூறியிருந்தோம்.
ஆனால் எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை. மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.
நாம் முன்னரே கூறியது போன்று, அவர்கள் எதையும் செய்யவில்லையென்று அனைத்துலக சமூகம் கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

news.tamilstar thanks

No comments:

Post a Comment