அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

கடந்த இரு மாதத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 51 கோடி!




நடப்பு நிதி ஆண்டில்  மட்டும் அதாவது, ஏப்ரல் முதல் பிப்ரவரி  வரையிலான காலக்கட்டங்களில்,  174.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதன் மதிப்பு ரூபாய் 51.03 என்றும் கூறியுள்ளார்.

இது கடந்த 2011-12ம் நிதி ஆண்டு பறிமுதல் செய்யப்பட தங்கத்தைக் காட்டிலும் அளவின் அடிபடையில் 8.5 சதவிகிதமும், மதிப்பின் அடிப்படையில், 47 சதவிகிதமும் அதிகமாகும் என்றும் அவர்  கூறியுள்ளார். மேலும் "தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எலையோரப் பகுதிகளை சுங்கத்துறை தீவிரமாக் கண்காணித்து வருகிறது.

தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் 864.20 டன் தங்கம் விற்பனையாகி உள்ளது. இதில் 90 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டதாகும். இறக்குமதி அதிகமாக உள்ளதால் நடப்பு, கணக்கு பற்றாக்குறை உயர்ந்து பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறையில், தங்கம் இறக்குமதியின் பங்கு அதிகமாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஜனவரி மாதத்தில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 4 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக உயர்த்தியது. தங்கம் மீது மக்கள் அதிகம் மோகம் கொண்டுள்ளனர். பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில் ரொக்கமாக சேமிப்பதை காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

தங்கம் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பாரத் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்க ஆபரணங்கள், நாணயங்கள் தங்க கட்டிகள் போன்றவற்றை  வாங்குவதற்கு கடன் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் முதலீட்டை  அதிகப்படுத்தும் வகையில், தங்க டெபாசிட் திட்டங்களையும் வங்கிகள் மாற்றி அமைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கத்தில் பொதுமக்களின் முதலீட்டை குறைக்கும் வகையில், பண வீக்கம் சார்ந்த கடன் பத்திரங்களையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment